/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொடர் மழை எதிரொலி பசுமையாக மாறி வரும் கஞ்சமலை
/
தொடர் மழை எதிரொலி பசுமையாக மாறி வரும் கஞ்சமலை
ADDED : மே 21, 2024 11:57 AM
வீரபாண்டி: சேலத்தில், கடந்த சில ஆண்டுகளாக அக்னி நட்சத்திரம் என்ற 'கத்திரி' வெயில் காலத்துக்கு முன்பே, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து மார்ச் மாதத்தில், 100 டிகிரிக்கும் மேல் கொளுத்தியது.
நடப்பாண்டும் கத்திரி வெயிலுக்கு முன்பே, சுட்டெரித்த வெயிலால் தண்ணீரின்றி கஞ்சமலையில் இருந்த அனைத்து மரங்கள், புற்கள் காய்ந்து கருகி கடந்த மாதம் தீப்பிடித்து எரிந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் முடிவடையும் முன்பே கடந்த, 10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், கஞ்சமலையில் காய்ந்த இலைகள் உதிர்த்து விட்டு, புதிய இளம் தளிர்கள் துளிர்த்து வருகிறது.
இதனால் கருகி களையிழந்து காணப்பட்ட கஞ்சமலை, இளம் பச்சை நிற மர இலைகளால் மீண்டும் தனது இயல்பு நிலைக்கு பசுமையாக மாற துவங்கியுள்ளது. இதனால் கஞ்சமலையில் வசிக்கும் குரங்குகள், பறவைகள், விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இன்றி ஆனந்தமான வாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

