/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் பயனாளி தேர்வுக்கு கிராம சபை
/
கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் பயனாளி தேர்வுக்கு கிராம சபை
கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் பயனாளி தேர்வுக்கு கிராம சபை
கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் பயனாளி தேர்வுக்கு கிராம சபை
ADDED : ஜூன் 27, 2024 03:43 AM
சேலம்: கனவு இல்ல திட்டத்தில், 4,229 வீடுகள் கட்ட, பயனாளிகள் பட்டியலை இறுதி செய்ய, ஜூன், 30ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: ஊரக பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் புது கான்கிரீட் வீடுகள், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் சேலம் மாவட்டத்துக்கு, 2024 - 25ம் ஆண்டுக்கு, 4,229 வீடுகள் கட்ட, முதல்கட்ட ஒதுக்கீடு வந்துள்ளது. அனைத்து வட்டாரங்களில் தகுதியுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியல், ஜூன், 30ல் கிராம ஊராட்சிகளில் நடக்கும் சிறப்பு கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட உள்ளது. அதனால் மக்கள், அன்று நடக்கும் கிராம சபையில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
இன்று ஆர்ப்பாட்டம்
இப்பணிகளுக்கு உரிய அவகாசம் வழங்காததை கண்டித்து, இன்று மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை அந்தந்த ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.