/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ் - மொபட் மோதி காவலாளி உயிரிழப்பு
/
பஸ் - மொபட் மோதி காவலாளி உயிரிழப்பு
ADDED : மே 25, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், பெரமனுார் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 63.
திருச்சி பிரதான சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த, 22 இரவு, 10:00 மணிக்கு, 'ஸ்கூட்டி' மொபட்டில் திருச்சி பிரதான சாலை, கல்பனா தியேட்டர் அருகே வந்தபோது, முன்புறம் சென்ற தனியார் பஸ், ஸ்டாப்பில் நிறுத்தியது. இதில் பஸ் பின்புறம், மொபட் மோதியதில் ரவிச்சந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று மதியம் உயிரிழந்தார். செவ்வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

