/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு ஒருவர் கைது; 5 பேருக்கு வலை
/
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு ஒருவர் கைது; 5 பேருக்கு வலை
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு ஒருவர் கைது; 5 பேருக்கு வலை
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு ஒருவர் கைது; 5 பேருக்கு வலை
ADDED : ஆக 04, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு விழாவை நேற்று நடத்தினர்.
அதற்கு, 10க்கும் மேற்பட்ட காளைகளை, பொது வழிப்பாதையில் அவிழ்த்துவிட்டனர். இதை அறிந்து தம்மம்பட்டி போலீசார் வந்து, ஜல்லிக்கட்டை நிறுத்தினர். அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக, அதே ஊரைச்சேர்ந்த, விஜய், 29, உள்பட, 6 பேர் மீது வழக்குப்பதிந்தனர். பின் விஜயை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற, 5 பேரை தேடுகின்றனர்.