/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சநாயக்கன்பட்டி மலைக்கோவில் அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
/
கஞ்சநாயக்கன்பட்டி மலைக்கோவில் அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
கஞ்சநாயக்கன்பட்டி மலைக்கோவில் அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
கஞ்சநாயக்கன்பட்டி மலைக்கோவில் அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : ஜூன் 17, 2024 01:00 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட எலத்துார் காப்புக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் ஓராண்டாக உள்ளது. கரடு பகுதிக்கு வரும் ஆடுகளை வேட்டியாடி வந்த சிறுத்தை, உணவு கிடைக்காதபோது, மலை அடிவார பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து, நாய், மாடுகளை தாக்கி உட்கொண்டு மீண்டும் வன பகுதிக்குள் சென்று
விடுகிறது. எலத்துார், காருவள்ளி, கோம்பைக்காட்டில் இரு முறை வனத்துறை அதிகாரி
கள் கூண்டுகள் வைத்தும் சிக்க
வில்லை. தினமும், 10 முதல், 15 கி.மீ., பயணிப்பதாகவும் அதனால் சிக்கவில்லை என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் காருவள்ளி
யில் இருந்து நங்கவள்ளிக்கு சென்ற சிறுத்தை அப்பகுதியில் சில நாட்களாக கால்நடைகளை வேட்டியாடி விட்டு, தற்போது மீண்டும் கஞ்சநாயக்கன்பட்டி எல்லைப்பகுதியில் உள்ள மலைக்கோவில் அடிவாரப்
பகுதியில் நடமாடுவதாக, அப்
பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன், ஒரு ஆட்டை வேட்டையாடிய நிலையில் நேற்று முன்தினம் இரவு, கோவிந்தகவுண்டனுாரில் சிறுத்தை வந்துள்ளது.
மழையால் அதன் காலடிகள் விளை நிலங்களில் பதிந்துள்ளன. அதை போட்டோ எடுத்து, 'வாட்ஸாப்' மூலம் பரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு டேனிஷ்பேட்டை வனத்துறையினர், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆனால் மயில்காடு, குண்டன் பூசாரி கொட்டாய், கோவிந்த
கவுண்டனுார், மலைக்கோவில் அடிவாரம் ஆகிய பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.