/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்வரத்து 157 நாளுக்கு பின் உயர்வு
/
மேட்டூர் அணை நீர்வரத்து 157 நாளுக்கு பின் உயர்வு
ADDED : மே 28, 2024 09:22 PM
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், கீழ் பகுதியில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் கோடைமழை தீவிரம் அடைந்தது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 390 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று, 1,432 கனஅடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு டிச., 22ல் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு, 1,584 கனஅடி நீர் வந்தது. தொடர்ந்து படிப்படியாக சரிந்தது. கடந்த ஏப்., 3ல், வினாடிக்கு, 5 கனஅடி என, கடுமையாக சரிந்தது. இந்நிலையில், 157 நாட்களுக்கு பின் அணை நீர்வரத்து நேற்று, 1,432 கனஅடியாக அதிகரித்தது. குடிநீருக்கு, 2,100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு கூடுதலாக உள்ளதால் நேற்று முன்தினம், 47.64 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 47.52 அடியாக சரிந்தது.