/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டர் முன் அமர்ந்து தாய், மகன் திடீர் தர்ணா
/
கலெக்டர் முன் அமர்ந்து தாய், மகன் திடீர் தர்ணா
ADDED : ஆக 06, 2024 08:26 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த ஓலப்பட்டி காட்டுவளவை சேர்ந்த மூதாட்டி பாப்பா, 75. இவ-ரது மகன் சசிக்குமார், 40. இருவரும் காலி குடங்-களுடன் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது, எதிரே வந்த கலெக்டருக்கு முன்பாக, அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்ததால் பரபரப்பு உண்டா-னது. அவர்களிடம் விசாரித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுப்பதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தாய் -மகனை சமாதானப்படுத்தினர்.அப்-போது சசிக்குமார் கூறுகையில்,'' அரசு மானியம் பெற்று, இரு ஆண்டுக்கு முன், சொந்தமாக போர்வெல் போட்டேன். அதற்கு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளேன். குடிநீருக்காக, 2 கி.மீ., துாரம் செல்ல வேண்டி உள்ளது. மின்-வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கேட்டும் கண்-டுகொள்ளவில்லை,'' என்றார்.
சசிக்குமார் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு அவரை, சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு, மருத்து-வர்கள் பரிசோதனை செய்ததில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்தது. அவரை, சிகிச்சைக்கு அனுமதிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தாய் பாப்பா, மனு கொடுத்-துவிட்டு, வீட்டுக்கு சென்றார்.