/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை
/
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை
சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வசந்த விழாவில் நந்தவன சேவை
ADDED : மே 30, 2024 01:04 AM
சேலம், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி ஆனதை தொடர்ந்து பூமியை குளிர்விக்கும்படி, சிவாலயங்களில் தாராபாத்திர அபிேஷகம் செய்வது போல் விஷ்ணு ஆலயங்களில் வசந்த உற்சவம் நடத்தப்படும். அதன்படி சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 5 நாட்கள் வசந்த விழா, 14ம் ஆண்டாக நேற்று தொடங்கியது.
இதற்கு கோவிலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு தெப்பக்குளத்தில் நந்தவனம் போல் அலங்கரித்து காய்கனிகளை தொங்கவிட்டு, நடுவே அமைக்கப்பட்ட ஊஞ்சலில், தாயாருடன் பெருமாளை எழுந்தருளச்செய்து சேர்த்தி சேவையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஜூன், 2 வரை, தினமும் மாலை, சவுந்தரவல்லி தாயாருடன் சவுந்தரராஜருக்கு சேர்த்தி திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி, இசைக்கருவிகளை இசைத்து, கோலாட்டம், கோணங்கி, பரதநாட்டியம் ஆகிய நடனங்கள் ஆடி, இசையாஞ்சலி, புஷ்பாஞ்சலி, நாட்டியாஞ்சலிகளால் பெருமாளை குளிர்விக்க உள்ளனர்.