/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய எலும்பு மூட்டு தினம் விழிப்புணர்வு மாரத்தான்
/
தேசிய எலும்பு மூட்டு தினம் விழிப்புணர்வு மாரத்தான்
தேசிய எலும்பு மூட்டு தினம் விழிப்புணர்வு மாரத்தான்
தேசிய எலும்பு மூட்டு தினம் விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : ஆக 05, 2024 02:10 AM
சேலம், தேசிய எலும்பு மூட்டு தினத்தையொட்டி சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. தனியார் மருத்துவமனை மேலாண் இயக்குனர் சுரேஷ், இயக்குனர் பாலமுருகன் தொடங்கி வைத்தனர். 5 ரோடு, ஐ.எம்.ஏ., வளாகத்தில் தொடங்கிய போட்டி, சாரதா கல்லுாரி சாலை வழியே அஸ்தம்பட்டி வரை சென்று மீண்டும் ஐ.எம்.ஏ., வளாகத்தில் நிறைவடைந்தது. மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சேலம் ரன்னர்ஸ் கிளப் நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
இதுகுறித்து சேலம் மிட்வெஸ்ட் ஆர்த்ததோ சொசைட்டி செயலர் மயில்வாகணன் கூறுகையில், ''இந்திய, தமிழ்நாடு எலும்புமூட்டு அறுவை சங்கம், சேலம் மிட்வெஸ்ட் ஆர்த்தோ சொசைட்டி சார்பில், ஆக., 1 முதல், 7 வரை எலும்பு மூட்டு சிகிச்சை விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாரத்தான் நடந்தது. தொடர்ந்து ெஹல்மெட், சீட் பெல்ட் அணிவதால் உண்டாகும் நன்மை, போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,'' என்றார்.