/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர் மோர் பந்தல்: இ.பி.எஸ்., திறப்பு
/
நீர் மோர் பந்தல்: இ.பி.எஸ்., திறப்பு
ADDED : ஏப் 28, 2024 04:31 AM
இடைப்பாடி: அ.தி.மு.க., சார்பில் அனைத்து இடங்களிலும் நீர் மோர் பந்தல் திறந்து, மக்கள் பயன்பெறும்படி வழங்க, அக்கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி கொங்கணாபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மணி தலைமை வகித்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் கொங்கணாபுரம் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், டவுன் பஞ்சாயத்து செயலர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, கோரணம்பட்டி ஊராட்சி தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் இடைப்பாடியில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலர் முருகன் தலைமை வகித்தார். அங்கும், பொதுச்செயலர் இ.பி.எஸ்., நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார். இதில் நகராட்சி முன்னாள் சேர்மன் கதிரேசன், ஒன்றிய செயலர்கள் மாதேஸ், மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

