/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலையில் தொலைநிலை கல்விக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு
/
பெரியார் பல்கலையில் தொலைநிலை கல்விக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு
பெரியார் பல்கலையில் தொலைநிலை கல்விக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு
பெரியார் பல்கலையில் தொலைநிலை கல்விக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு
ADDED : செப் 09, 2024 07:16 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில் தொலை நிலைக்கல்விக்கு அனுமதி கொடுக்க, இன்று முதல், செப்., 11 வரை, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில் அனுமதி வழங்க கூடாது என, இந்திய மாணவர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்க சேலம் மாவட்ட செயலர் பவித்ரன் அறிக்கை: பெரியார் பல்கலை தொலைநிலை கல்விக்கு போதிய ஆசிரியர், அலுவலர்கள் இல்லை. ஆனால் பல்கலை துறை ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர், உறுப்பு கல்லுாரி முதல்வர்களை பேராசிரியர்கள் என, போலி கணக்கு காட்டி பல்கலை மானியக்குழுவினரை ஏமாற்றும் முயற்சி நடக்கிறது. இதை இந்திய மாணவர் சங்கம் கண்டிக்கிறது. மேலும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தொலைநிலை கல்வியில் சேரும் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.