/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சிட்ரோயன் ஷோரூம்' திறப்பு புது 'பசால்ட்' கார் அறிமுகம்
/
'சிட்ரோயன் ஷோரூம்' திறப்பு புது 'பசால்ட்' கார் அறிமுகம்
'சிட்ரோயன் ஷோரூம்' திறப்பு புது 'பசால்ட்' கார் அறிமுகம்
'சிட்ரோயன் ஷோரூம்' திறப்பு புது 'பசால்ட்' கார் அறிமுகம்
ADDED : செப் 15, 2024 03:58 AM
சேலம்: சேலம், நரசோதிப்பட்டி, தி ட்ரூ சாய் ஒர்க்ஸ் குழுமத்தின், 'சிட்ரோயன் ஷோரூம்' திறப்பு விழா, புதிய, 'பசால்ட்' கார் அறிமுக விழா நடந்தது. இயக்குனர் பழனிவேல்பாபு, இணை இயக்குனர் விஜயசங்கர் முன்னிலையில், கந்தஸ்வர்ணா குழும நிறுவனர் புவனேஸ்வரன், இயக்குனர் சக்திவேல், புது காரை அறிமுகப்படுத்தினர்.
தி ட்ரூ சாய் நிறுவன வாடிக்கையாளர்கள், வங்கி மேலாளர்கள், வணிகர்கள், நிதி நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.வாகன தொழில்நுட்பம் குறித்து சிட்ரோயன் நிறுவன தொழில்நுட்ப வல்லுனர் தரணிதரன் கூறியதாவது:
பசால்ட் எஸ்.யு.வி., கூபே ரக கார். இது, 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டு, 82 பி.ஹெச்.பி., - 110 பி.ஹெச்.பி., என, இரு வகைகளில் உள்ளன. 5 மற்றும் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ்கள், 470 லிட்டர் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல், 6 ஏர் பேக் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. வாகன சந்தையில் முதல்முறை, 'பிளையிங் கார்பெட் சஸ்பென்ஸ்' எனும் அதே நவீன தொழில்நுட்பம் கொண்ட அமைப்புகள் உள்ளன. இதன் ஆரம்ப விலை, 7.99 லட்சம் ரூபாய் முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழா ஏற்பாடுகளை, தி ட்ரூ சாய் மோட்டாரின் விற்பனை மேலாளர் பாஸ்கர், டீம் லீடர் பிரபு, விற்பனை பிரதிநிதிகள் செய்திருந்தனர்.