ADDED : நவ 02, 2026 02:04 AM
அ நிறம் | அளவு
சேலம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 'குரூப் 2, 2ஏ' பணிக்கான முதல்நிலை தேர்வுக்கு, சேலம் மாவட்டத்தில், 28,921 பேர் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு, 67 மையங்களுக்கு உட்பட்ட, 97 கூடங்களில், நேற்று காலை, 9:30 முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்தது. மாற்றுத்திறனாளி, பார்வையற்றோருக்கு, 1:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 23,780 பேர் எழுதினர். இது, 82.22 சதவீதம். 5,141 பேர் வரவில்லை. இது, 17.77 சதவீதம். மணக்காடு காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மரவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மையங்களில், கலெக்டர் இளம்பகவத் ஆய்வு செய்தார்.
