/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பங்குனி தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்
/
பங்குனி தேர் திருவிழா: இன்று கொடியேற்றம்
ADDED : மார் 22, 2024 01:47 AM
வீரபாண்டி;சேலம் மாவட்டம் ராக்கிப்பட்டி அருகே செங்கோடம்பாளையத்தில் உள்ள சென்றாய பெருமாள் மலைக்கோவிலில் பங்குனி தேர் திருவிழா இன்று இரவு, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை கருட வாகனம், 24, 25ல் திருவீதி உலா நடக்கும். 26ல் தேரோட்டம் நடக்க உள்ளது. அன்று காலை, 6:00 மணிக்கு சுவாமி மலையில் இருந்து இறங்கி தேருக்கு எழுந்தருள்வார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம், இரவு, 10:00 மணிக்கு புஷ்ப விமானத்தில் சுவாமி ஊர்வலம் நடக்க உள்ளது. 28 அதிகாலை, 3:00 மணிக்கு சத்தாபரண ஊர்வலம், 29ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் தேர் திருவிழா முடிந்து சுவாமி மலைக்கு புறப்படுவார்.
இதை முன்னிட்டு தேர்களை சுத்தம் செய்து சாரங்கள் கட்டி துணி போர்த்தி அலங்கரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

