/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விமான நிலையத்தில் பயணியர் போராட்டம்
/
விமான நிலையத்தில் பயணியர் போராட்டம்
ADDED : மே 29, 2024 08:30 PM
ஓமலுார்:சேலம் விமான நிலையத்தில் இருந்து, 'அலையன்ஸ் ஏர்' விமான நிறுவனம் சார்பில் பெங்களூரு, ஹைதராபாத், கொச்சிக்கு பயணியர் விமான சேவை இயக்கப்படுகிறது. நேற்று மதியம், 1:40க்கு கொச்சி செல்ல வேண்டிய விமானம் தாமதம் என அறிவிக்கப்பட்டது. மதியம், 3:00க்கு, 60 பயணியர் சோதனை செய்யப்பட்டு, காத்திருப்போர் அறையில் அமர வைக்கப்பட்டனர். ஆனால், சிறிது நேரத்தில், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக, அலையன்ஸ் ஏர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆத்திரம் அடைந்த பயணியர், அலுவலகம் முன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பயணியர் கூறியதாவது:
உடுமலையில் இருந்து வந்து சேலத்திலிருந்து, 21 பேருடன் கொச்சி செல்ல வந்தோம். கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கின்றனர். கொச்சியில் இருந்து, 'ரிட்டன்' டிக்கெட்டும் முன்பதிவு செய்திருந்தோம்; அனைத்தும் வீணாகிவிட்டது. குழந்தைகளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோட்டில் இருந்து வந்த பயணி ஒருவர் கூறுகையில், “என் மனைவிக்கு, 'சர்ப்ரைஸ்' கொடுக்கும் விதமாக கொச்சி அழைத்து செல்ல வந்தேன். அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது,” என்றார்.