/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காரில் ஆடு திருடிய 2 பேர்: மடக்கிப்பிடித்த போலீசார்
/
காரில் ஆடு திருடிய 2 பேர்: மடக்கிப்பிடித்த போலீசார்
காரில் ஆடு திருடிய 2 பேர்: மடக்கிப்பிடித்த போலீசார்
காரில் ஆடு திருடிய 2 பேர்: மடக்கிப்பிடித்த போலீசார்
ADDED : மார் 13, 2025 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, ஜங்கமசமுத்திரத்தை சேர்ந்தவர் ரவி, 51, கூலித்தொழிலாளி.
இவர் வளர்க்கும் இரு ஆடுகளை, நேற்று அதிகாலை, 3:20 மணிக்கு, 'மாருதி ஆம்னி' காரில் வந்த மர்ம நபர்கள் திருடிச் செல்வதை பார்த்து கூச்சலிட்டபடி, அவர்களை விரட்டிச் சென்றார்.
அவர் தகவல்படி, தம்மம்பட்டி போலீசார், ஸ்டேஷன் வழியே சென்றபோது, ஆம்னி காரை மறித்து பிடித்தனர்.
விசாரணையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சின்ன செக்கடியை சேர்ந்த பன்னீர்செல்வம், 23, கொல்லிமலை, மேலுாரை சேர்ந்த குமார், 39, என்பதும் தெரிந்தது.
ஆடுகளை மீட்ட போலீசார், ஆம்னி காரை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.