/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
/
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தங்கைக்கு சீர்வரிசை வழங்கல்
ADDED : ஆக 04, 2024 03:52 AM
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில் அதன் தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு, 18 வகை சீர்வரிசை வழங்கப்பட்-டன.
ஆடிப்பெருக்கில் சகோதரிகளை, வீடுகளுக்கு அழைத்து சீர்வ-ரிசை வழங்கப்படும். அதன்படி சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்து தங்க ஆபர-ணங்கள், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டன.
அதேபோல் பெருமாளின் தங்கையான கோட்டை மாரியம்ம-னுக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, பட்டாடை உடுத்தி அலங்க-ரிக்கப்பட்டது. தொடர்ந்து பல்லக்கில் அமர்த்தி ஊர்வலமாக, அழகிரிநாதர் கோவிலுக்கு திரளான பக்தர்கள் சென்றனர்.
அழகிரிநாதர் கோவிலை அடைந்ததும், சுதர்சன பட்டாச்சாரியார், அழகிரிநாதருக்கு சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து வெற்-றிலை, பாக்கு, மாங்கல்யம், பட்டு சேலை, வஸ்திரம், ஆபரணம் உள்பட, 18 வகை சீர்வரிசைகளை, மாரியம்மனுக்கு வழங்-கினார். அப்போது சிறப்பு அர்ச்சனைகள் நடந்தன.
அண்ணன் தந்த பட்டுசேலை, தங்கைக்கு சாத்தப்பட்டு தீபார-ாதனை காட்டப்பட்டது. தொடர்ந்து மாரியம்மன் சீர்வரிசை-களை எடுத்துக்கொண்டு அம்மன் ஊர்வலமாக, பக்தர்களுடன் புறப்பட்டார். இந்த வைபவத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு க-ளித்து தரிசனம் செய்தனர்.