/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வயலில் மழைநீர்: பயிர்கள் புத்துயிர்
/
வயலில் மழைநீர்: பயிர்கள் புத்துயிர்
ADDED : மே 16, 2024 03:27 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் விளை நிலங்கள் வறண்டு காணப்பட்டன. மண்ணில் வெடிப்பு ஏற்பட்டு அரளி, தென்னை, கொய்யா, சப்போட்டா, வாழை மரங்கள் காய்ந்து கருகிய நிலையில் இருந்தன.
இந்நிலையில், 3 நாட்களாக மழை பெய்து வருவதால் பருவநிலை மாறியது. நேற்று மதியம், 2:10 மணி முதல், ஒரு மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால், வயலில் மண் புழுதி அடங்கியது. வெடிப்புகளில் மழைநீர் சென்று வயலில் தண்ணீர் தேங்கியது. இதனால் கருகும் நிலையில் இருந்த அரளி, குண்டுமல்லி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் கொடுக்கும் விதமாக அமைந்தது.
2ம் நாளாக மழை
அதேபோல் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், சிங்கிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மதியம், 2:00 மணி முதல், ஒரு மணி நேரம் மழை பெய்தது. நேற்று முன்தினமும் மழை பெய்திருந்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால், வாழப்பாடி சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.