/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு
ADDED : ஜூன் 19, 2024 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், விவசாய கிணற்றில் தவறி விழுந்த தம்பதியை, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.
ஆத்துார் அருகே, ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42. இவர் மனைவி கவிதாவுடன், 32, நேற்று இரவு, 7:00 மணியளவில் விவசாய கிணற்றின் வழியாக சென்றுள்ளனர்.
அப்போது கால் தவறி இருவரும், 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து, உயிருக்கு போராடினர். 7:30 மணியளவில் தகவல் தெரிந்த ஆத்துார் தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், வெங்கடேஷ், அவரது மனைவி கவிதா ஆகியோரை உயிருடன் மீட்டனர்.