/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.90 லட்சம் மாயம்: நால்வர் மீது வழக்கு
/
ரூ.90 லட்சம் மாயம்: நால்வர் மீது வழக்கு
ADDED : ஆக 06, 2024 02:13 AM
மல்லுார், சேலம் கிழக்கு மாவட்ட பா.ஜ., செயலர் கருணாகரன், 50. இவர், தாசநாயக்கன்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் அளித்துள்ள புகார் மனுவில், பூர்விக சொத்தை விற்பனை செய்தது மூலம் கிடைத்த, 90 லட்சம் ரூபாயை வீட்டில் வைத்து விட்டு, கடந்த ஜூன், 4 முதல், 27 வரை வெளியூர் சென்றிருந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது பணம் இல்லை. அடுக்குமாடி வீட்டு உரிமையாளர், தன்னிடம் உள்ள மற்றொரு சாவி மூலம், பணத்தை எடுத்து கொண்டுள்ளனர் என, கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வீட்டு உரிமையாளர் வேல்குமார், ஜெயந்தி, பாஸ்கர், ராமசாமி ஆகியோர் மீது நேற்று, முன்தினம் மல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.