ADDED : ஆக 25, 2024 07:03 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. சுற்றுப்பகுதியில் ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள், 4,230 ஆடு-களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 7,750 முதல், 8,700 ரூபாய்; செம்மறியாடு, 7,750 முதல், 7,900 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 3 கோடியே, 40 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
ரூ.75 லட்சத்துக்கு பருத்தி
அதேபோல் கொங்கணாபுரத்தில் உள்ள திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்க கிளையில் பருத்தி ஏலம் நடந்தது. விவசாயிகள், 3,000 மூட்டைகளை கொண்டு வந்-தனர். பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 6,700 முதல், 7,800 ரூபாய், கொட்டு பருத்தி, 4,300 முதல், 5,150 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், பி.டி., ரக மூட்டை, 250 ரூபாயும், கொட்டு பருத்தி, 900 ரூபாயும் விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.