/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் கொளுத்திய வெயில் தமிழகத்தில் அதிகபட்ச பதிவு
/
சேலத்தில் கொளுத்திய வெயில் தமிழகத்தில் அதிகபட்ச பதிவு
சேலத்தில் கொளுத்திய வெயில் தமிழகத்தில் அதிகபட்ச பதிவு
சேலத்தில் கொளுத்திய வெயில் தமிழகத்தில் அதிகபட்ச பதிவு
ADDED : ஏப் 24, 2024 02:21 AM
சேலம்:கோடை காலம் தொடங்கியது முதல், சேலம், ஈரோடு பகுதிகளில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருகின்றது. நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக, சேலத்தில், 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இது பாரன்ஹீட் அளவில், 108.1 டிகிரி.
அதேபோல் ஈரோட்டில், 42 டிகிரி செல்சியஸ், திருப்பத்துார், கரூர் பரமத்தியில், 41.5, தர்மபுரி, மதுரையில், 41, நாமக்கல்லில், 40.5, திருச்சியில், 40, திருத்தணியில், 39.7, கோவையில், 39.1, பாளையங்கோட்டையில், 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சேலத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று வெயில் கொளுத்தியதால் பகலில் வெளியே செல்ல முடியாதபடி அனல்காற்று வீசியது. மாலை, 6:00 மணிக்கு மேலாகியும் வெயில் தாக்கம் குறையவில்லை.
ஏசி, ஏர்கூலர், மின்விசிறி என, கூடுதல் மின் தேவையால் பெரும்பாலான பகுதிகளில், 'லோ வோல்டேஜ்' மின்சாரமே இருந்தது. அவ்வப்போது ஒரு மணி நேரம் வரை மின்தடையும் ஏற்பட்டது. சில இடங்களில் மின்மாற்றி வெடித்ததால், நாள் முழுதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

