sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் தேசிய அளவில் முதலிடம்....

/

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் தேசிய அளவில் முதலிடம்....

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் தேசிய அளவில் முதலிடம்....

செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் தேசிய அளவில் முதலிடம்....


ADDED : மே 16, 2024 04:17 AM

Google News

ADDED : மே 16, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: செந்தில் பப்ளிக் பள்ளி(சி.பி.எஸ்.இ.,) 2024ம் ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அதில், 10ம் வகுப்பு நடுவண் இடைநிலை கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ.,) தேர்வில், சேலம் செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் பார்கவன், 500க்கு, 500 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். அதேபோல் பிளஸ் 2 வகுப்பில் கணிதம், உயிரியல் பிரிவில், ஸ்ரீநிதி, 500க்கு, 490 மதிப்பெண் பெற்று சேலம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும், 10ம் வகுப்பில் ரிதன்யா, 496 மதிப்பெண் பெற்று, பள்ளியில், 2ம் இடம் பெற்றார். முகில் அரசு, அஸ்மிதா ஆகியோர், 495 மதிப்பெண்கள் பெற்று, 3ம் இடத்தை பெற்றனர். ஆங்கிலத்தில் ஒருவர், தமிழில், 10 பேர், கணிதத்தில், 16 பேர், சமூக அறிவியலில், 11 பேர், தொழில்நுட்ப அறிவியலில், 16 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.

அதேபோல், பிளஸ் 2 வகுப்பில், 500க்கு, 483 மதிப்பெண் பெற்று, சம்ரிதா, பிரசன்னா ஆகியோர், பள்ளியில், 2ம் இடத்தை பிடித்தனர். கீர்த்தி விஷால், 479 மதிப்பெண் பெற்று, 3ம் இடத்தை பெற்றார். ஆங்கிலத்தில் ஒருவர், இயற்பியலில் ஒருவர், மனையியல் (Home Science) பாடத்தில் ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர்.

சேலம் செந்தில் பப்ளிக் நிர்வாக குழு தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி, தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, தலைமை நிர்வாக அதிகாரி சதீஷ்குமார்(சி.பி., பிரிவு), 10ம் வகுப்பு கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மெர்சி ஜாய்ஸ் கமலம், கருணாம்பிகை, வைஜெயந்தி, பிளஸ் 2 வகுப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்தர்ராஜன், வினோத்குமார், அனைத்து ஆசிரியர்கள், சாதனை படைத்த மாணவர்கள், அவர்களது பெற்றோருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.






      Dinamalar
      Follow us