/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாக்கடை அடைப்பால் தேங்கிய கழிவு நீர்
/
சாக்கடை அடைப்பால் தேங்கிய கழிவு நீர்
ADDED : செப் 03, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம் பஸ் ஸ்டாண்டு அருகே, நங்கவள்ளி சாலையில் சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால், கழிவுநீர் சாலையில் நேற்று தேங்கியது.
இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், முதியோர், வாகன ஓட்டிகள் கழிவுநீரில் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. கழிவுநீர் தேங்கியதால், அங்கு கடை வைத்துள்ள வியாபாரிகள் கழிவுநீர் துர்நாற்றத்தால் சிரமப்பட்-டனர். நோய் தொற்று ஏற்படும் நிலையில், சாக்கடையை துார்-வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.