/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை, பக்தர்கள் தரிசனம்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை, பக்தர்கள் தரிசனம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை, பக்தர்கள் தரிசனம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் சிறப்பு பூஜை, பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 14, 2024 07:48 AM
வீரபாண்டி : வளர்பிறை சஷ்டியையொட்டி, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், மாதம்தோறும் அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. சித்திரை மாத வளர்பிறை சஷ்டியான நேற்று காலை, 6:00 மணிக்கு மூலவர் கந்த சாமிக்கு கோ பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்து முத்தங்கி அணிவித்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதே போல் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசாமிக்கு வெள்ளி கவசங்கள் சார்த்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வளர்பிறை சஷ்டியையொட்டி, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், சேலம் ஆட்டையாம்பட்டி வேலநத்தம் பாவடி முத்துக்குமாரசாமி கோவில், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பரமணிய சுவாமி கோவில், கொண்டலாம்பட்டி வேல்முருக சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

