/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மான்ட்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா
/
மான்ட்போர்ட் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஜூலை 26, 2024 02:17 AM
ஏற்காடு: ஏற்காடு, மான்ட்போர்ட் மேல்நிலைப்பள்ளியில், 108-வது ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் மாணவர், தொழிலதிபர் ஸ்ரீராமுலு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாணவ, -மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. அதை, ஸ்ரீராமுலு, பள்ளி முதல்வர் டோமினிக் சாவியோ ஏற்றனர். பின் முன்னாள் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு ஓட்டம், தொடர் ஓட்டம், நீச்சல் போட்டிகள் நடந்தன.
மதியம் பரிசளிப்பு விழா, கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மாணவியரின் வரவேற்பு நடனம், இளநிலை மாணவர்களின் வண்ண மலர் நடனம், மேல்நிலை மாணவர்களின் அகிம்சை அறிவியல் விளையாட்டை மைய கருத்தாக கொண்ட குழு நடனம், இந்திய கலாசாரத்தை வலியுறுத்தும்படி மாணவியரின் நடனம் ஆகியவை நடந்தன. பின் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஸ்ரீராமுலு பரிசு வழங்கினார். தடகளம், நீச்சல் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கேபிரியல் அணியும், டிரில் மற்றும் நல்லொழுக்கத்துக்கான கேடயத்தை, பேட்ரிக் அணியும், கலைநிகழ்ச்சி, அணிவகுப்புக்கான கேட-யத்தை, மான்ட்போர்ட் அணியும் தட்டிச்சென்றன. இதில் மரிய ஜோசப், அருள்மாறன், பால்ராஜ், விக்டர், குரூஸ், ஜோசப் தாமஸ், ஆண்டனி, ஜேசுராஜ், பீட்டர் ராஜன், ஜான் பினு, பிரான்சிஸ், ஆகாஷ், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்-றனர்.