/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயறு வகையில் அதிக மகசூல் பெற தெளிப்பு கரைசலுக்கு அறிவுறுத்தல்
/
பயறு வகையில் அதிக மகசூல் பெற தெளிப்பு கரைசலுக்கு அறிவுறுத்தல்
பயறு வகையில் அதிக மகசூல் பெற தெளிப்பு கரைசலுக்கு அறிவுறுத்தல்
பயறு வகையில் அதிக மகசூல் பெற தெளிப்பு கரைசலுக்கு அறிவுறுத்தல்
ADDED : மே 30, 2024 01:32 AM
இடைப்பாடி, இடைப்பாடி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணிவாசகம் அறிக்கை:
பயறு வகை பயிர்களில் அதிக மகசூல் பெற இலைவழி தெளிப்பு கரைசல் அவசியம். பொதுவாக பயறு வகை பயிர்களில், 20 முதல், -25 சதவீதம் புரதத்தின் மாற்றத்துக்கு மணிச்சத்து முக்கியம். இது, டி.ஏ.பி., கரைசலில் உள்ளது. மண்ணில் இருந்து மணிச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதை விட இலைவழியே தெளித்தால் எளிதாக பயிர்கள் கிரகித்து புரதச்சத்தின் மாற்றத்தை அதிகப்படுத்தும். பூக்கள் பூத்த பின் இலைகளில் உற்பத்தியாகும் மாவுச்சத்தை விதையில் சேமிக்க ஏதுவாக இலைகள் பச்சையாக இருக்கவும் தேவைப்படும் தழைச்சத்தும், டி.ஏ.பி., கரைசலில் உள்ளது. பயறு வகை பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு, 2 சதவீத டி.ஏ.பி., கரைசல் தயாரிக்க, 4 கிலோ தேவைப்படுகிறது. 4 கிலோ டி.ஏ.பி., உரத்தை, 10 லிட்டர் நீரில் கரைத்து இரவு முழுதும் ஊற வைக்க வேண்டும். இரவில், 4 முறை இந்த கரைசலை நன்றாக கலக்க வேண்டும்.
மறுநாள் காலை, தெளிந்த நீரை வெள்ளை துணியால் வடிகட்டி அந்த நீருடன், 190 லிட்டர் நீர் கலந்து காலை, மாலையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். பயறு வகை பயிர்களில் விதைத்த, 30வது நாள் ஒருமுறை, 45வது நாள் ஒருமுறை தெளிக்கலாம். இல்லையெனில் பூக்கும் தருணத்தில் ஒரு முறை, 15வது நாள் கழித்தும் தெளிக்கலாம். இதனால் பூக்கள் கொட்டாது, காய்களில் பருப்பு திரட்சியாக இருக்கும். காய்களின் எண்ணிக்கை கூடும். மகசூல் வழக்கத்தை விட, 20 சதவீதம் அதிகரிக்கும். இந்த எளிய தொழில்நுட்பம் மூலம் செலவு குறைவு, வரவு அதிகம். அதனால் விவசாயிகள், இந்த தெளிப்பு முறையை பயன்
படுத்தி கொள்ளலாம்.