ADDED : ஆக 02, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் அருகே புங்கவாடியில் அம்பேத்கர் நகர், எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
அப்பகுதி மக்கள், சீரான முறையில் குடிநீர் கேட்டு, நேற்று காலை, 6:30 மணிக்கு புங்கவாடி வழியே சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து, காலி குடங்களை சாலையில் வைத்து, மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் ஊரக போலீசார் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. 8:30 மணிக்கு ஊரக வளர்ச்சித்துறையினர் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பஸ்சை விடுவித்து மக்கள் கலைந்து சென்றனர்.