/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
10 நாளில் மீண்டும் பழுதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி
/
10 நாளில் மீண்டும் பழுதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி
10 நாளில் மீண்டும் பழுதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி
10 நாளில் மீண்டும் பழுதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சி
ADDED : ஆக 17, 2024 03:52 AM
ப.வேலுார்: ப.வேலுார் டவுன் பஞ்சாயத்துக்கு சொந்தமான, குப்பை அள்ளும் மினி லாரியின், எப்.சி.,க்கு, இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து கொண்டு வந்த நிலையில், பத்தே நாளில் மீண்டும் பழுதால் கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், குப்பை சேகரிக்க, இரண்டு டிராக்டர், ஒரு மினி லாரி என, மூன்று வாக-னங்கள் உள்ளன. மினி லாரி வாங்கி, 15 ஆண்டுகளுக்கு மேலா-னதால், நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில், கடந்த ஓராண்டுக்கு முன், அப்போது பணியில் இருந்த துப்புரவு ஆய்-வாளர் குருசாமி மேற்பார்வையில், எப்.சி.,க்காக விடப்பட்டது.
கடந்தாண்டு இறுதியில், மினி லாரி பராமரிப்பு பணி நிறைவ-டைந்ததாக கூறி, மூன்று லட்சம் ரூபாய்க்கான பில் பட்டியலை, துப்புரவு ஆய்வாளர் குருசாமி, டவுன் பஞ்.,
நிர்வாகத்திடம் கொடுத்தார். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வண்-டிக்கு, மூன்று லட்சம் ரூபாய் செலவு என்று வந்த பில் தொகையால், அதிர்ச்சியடைந்த டவுன் பஞ்., அதிகாரிகள், மறு ஆய்வு செய்ய உத்தர
விட்டனர்.
இதையடுத்து, மறு ஆய்வு செய்து, இரண்டு லட்ச ரூபாய் மட்டும் கொடுத்து, கடந்த, பத்து நாட்களுக்கு முன், மினி லாரியை மீட்-டனர். பின், ஓரிரு நாட்கள் மட்டுமே குப்பை அள்ளும் பணிக்கு சென்ற மினி லாரி, தற்போது மீண்டும் பழுதானதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்-துள்ளனர்.
இதுகுறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:
குப்பை அள்ளும் லாரி மீண்டும் பழுதானதால், ஆங்காங்கே குப்பை அள்ளாமல் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து, செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம் தெரிவிக்க, நேற்று கவுன்சிலர்கள் சென்றபோது, 'போனில் தொடர்பு கொள்ளுங்கள்' என, சந்திக்க மறுத்து விட்டார். மேலும், டவுன் பஞ்சாயத்தில் நடக்கும் தவ-றுகளை சுட்டிக்காட்டினால், தலைவரின் ஆதரவு கவுன்சி-லர்கள், எங்கள் மீது வேண்டுமென்றே, மக்களிடம் பொய்யான குற்றச்சாட்டை பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறுகையில், ''காலையில் கவுன்சிலர்கள் வந்த போது, நான் மீட்டிங்கிற்கு சென்றுகொண்டிருந்தேன். அதனால் அவர்களை சந்திக்க முடிய-வில்லை. பழுதான குப்பை லாரி குறித்து, எனக்கு தெரிய-வில்லை. அலுவலக பணியாளர்களிடம் விசாரிக்கிறேன்,''
என்றார்.

