/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் ஸ்டேஷன் சாலை இருளில் மூழ்கியதால் அவதி
/
போலீஸ் ஸ்டேஷன் சாலை இருளில் மூழ்கியதால் அவதி
ADDED : மே 30, 2024 01:32 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டியில் ஏரி ரோடு பஸ் ஸ்டாப்பில் இருந்து அடிக்கரைக்கு செல்லும் சாலையில், பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அச்சாலை சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரி ரோடு பஸ் ஸ்டாப்பில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் வரை, 2 மின் கம்பங்கள் உள்ளன. ஒரு கம்பத்தில் மின் விளக்கு இல்லை.
மற்றொரு கம்பத்தில் விளக்கு இருந்தும் எரியவில்லை. அதனால் அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது. தவிர அப்பகுதியில் வலம் வரும் நாய்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகின்றன. இதனால் இரவில் போலீஸ் ஸ்டேஷன் வழியே செல்லும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பாதசாரிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். அங்கு மின்விளக்கு பொருத்த, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.