/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சைக்கிள் ஸ்டாண்ட் கட்டும் பணி தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
/
சைக்கிள் ஸ்டாண்ட் கட்டும் பணி தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
சைக்கிள் ஸ்டாண்ட் கட்டும் பணி தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
சைக்கிள் ஸ்டாண்ட் கட்டும் பணி தடுத்து நிறுத்திய வருவாய்த்துறை
ADDED : ஏப் 26, 2024 03:48 AM
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதியில் கால்நடை மருத்துவமனை வளாகம் அருகே, காருவள்ளி ஊராட்சி சார்பில் சைக்கிள் ஸ்டாண்ட் கட்டும் பணி சமீபத்தில் தொடங்கியது. புறம்போக்கு இடத்தில் வருவாய்த்துறையினர் அனுமதியின்றியும், நீரோடையை தடுக்கும்படியும் கட்டப் படுதாக, தகவல் வெளியானது.
இதுகுறித்து காருவள்ளி வி.ஏ.ஓ., பாரதி விசாரித்து, காடையாம்பட்டி தாசில்தார் ஹசினாபானுவிடம் தெரிவித்துள்ளார். இரு நாட்களுக்கு முன் ஆய்வு செய்த தாசில்ல்தார், கலெக்டரின் அனுமதியில்லாமல் பணி மேற்கொள்ளக்கூடது என கூறி, அப்பணியை நிறுத்த உத்தரவிட்டார். இதனால் பாதி கட்டடம் கட்டப்பட்ட நிலையில் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் குப்புசாமி கூறுகையில், ''சைக்கிள் ஸ்டாண்ட் கட்டுவது குறித்து கலெக்டருக்கு அனுமதி கடிதம் வைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.