/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இடியாப்பம் தயாரிக்க மர உபகரணம் பழமை மாறாத மலை கிராம மக்கள்
/
இடியாப்பம் தயாரிக்க மர உபகரணம் பழமை மாறாத மலை கிராம மக்கள்
இடியாப்பம் தயாரிக்க மர உபகரணம் பழமை மாறாத மலை கிராம மக்கள்
இடியாப்பம் தயாரிக்க மர உபகரணம் பழமை மாறாத மலை கிராம மக்கள்
ADDED : ஆக 03, 2024 08:11 PM

பனமரத்துப்பட்டி:அனைவராலும் விரும்பி சாப்பிடும் உணவாக இடியாப்பம் உள்ளது. இதை, கிராம பகுதிகளில், 'சந்தவம்' என அழைக்கின்றனர். இன்றும் இடியாப்பம் தயார் செய்ய, பல்வேறு விலையில் பல வகையில் உபகரணங்கள் சந்தையில் உள்ளன.
ஆனால், 200 ஆண்டுகளுக்கு முன், இடியாப்பம் செய்ய, அழகிய வேலைப்பாடுகளுடன் மரத்தில் உபகரணம் தயாரித்துள்ளனர். அதை, சேலம், ஜருகுமலையைச் சேர்ந்த செல்லன், 68, நாதம்மாள், 60, தம்பதியர் பாதுகாத்து, பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நாதம்மாள் கூறியதாவது:
தாத்தா காலத்தில் இருந்து இதை பயன்படுத்துகிறோம். இதை செய்து, 200 ஆண்டுக்கு மேல் இருக்கும். 5 கிலோ உள்ளது. அமாவாசை நாளில் ராகி களி, சாமை, வரகு, அரிசி சாதம் மூலம் சந்தவம் செய்து ஆடு, மாடுகளுக்கு படையல் போட்டு வழிபடுவோம். நாங்களும் சாப்பிடுவோம்.
இதில், சாப்பாட்டை போட்டு ஆண்கள் அழுத்த, கீழ் பகுதியில் வெளிவரும் சந்தவத்தை பெண்கள் பக்குவமாக எடுப்பர். இதில் தற்போதும் சந்தவம் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.