/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டை இடித்தபோது சுவர் விழுந்து தொழிலாளி பலி
/
வீட்டை இடித்தபோது சுவர் விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஜூன் 15, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி : நங்கவள்ளி அருகே சின்னசோரகை, பாலகுட்டையை சேர்ந்தவர் கணேசன், 61. கூலித்தொழிலாளியான இவர், புது வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு முன் இருந்த பழைய வீட்டை, நேற்று காலை, பொக்லைன் மூலம் இடிக்கும் பணி நடந்தது.
அப்போது கணேசன், பழைய வீட்டில் இருந்த, 'பீஸ்' கேரியரை கழற்ற சென்றார். அப்போது அவர் மீது சுவர் விழுந்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். நங்கவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.