ADDED : ஆக 05, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீரபாண்டி, ஆடி அமாவாசையையொட்டி சேலம், சித்தர்கோவில் சித்தேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் சார்பில் திருவாசகம் முற்றோதல் விழா நேற்று நடந்தது.
இதில், 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், சிவ வாத்தியங்கள் முழங்க திருவாசகத்தை தொடர் பாராயணம் செய்து ஆராதனை செய்தனர். மேலும் அமாவாசையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்தர்கோவிலுக்கு வந்து அங்குள்ள ஊற்றுக்கிணறுகளில் புனித நீராடி, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மொட்டை அடித்துக்கொண்டனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சித்தேஸ்வரரையும் மலை மேல் உள்ள ஞான சற்குரு பாலமுருகனையும் தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.