/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.50 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: காரை விட்டு ஓடியவருக்கு வலை
/
ரூ.50 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: காரை விட்டு ஓடியவருக்கு வலை
ரூ.50 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: காரை விட்டு ஓடியவருக்கு வலை
ரூ.50 லட்சத்துக்கு புகையிலை பறிமுதல்: காரை விட்டு ஓடியவருக்கு வலை
ADDED : மார் 31, 2024 04:10 AM
ஆத்துார்: காரில் கடத்தி வந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை மூட்டைகளை, தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். காரை விட்டு தப்பி ஓடியவரை போலீசார் தேடுகின்றனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனுாரில் உள்ள, கெங்கவல்லி பிரிவு சாலையில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு தேர்தல் பறக்கும்படை அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வந்த, 'எஸ்கிராஸ்' காரை நிறுத்துமாறு, 'சைகை' காட்டினர்.
டிரைவர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். சந்தேகம் அடைந்த பறக்கும் படையினர், போலீஸ் உதவியுடன் அந்த வாகனத்தை விரட்டிச்சென்றனர்.
வீரகனுார் வடிவுச்சி அம்மன் கோவில் பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
காரை சோதனை செய்தபோது, மூட்டை, மூட்டையாக, தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிந்தது. காருடன் பறிமுதல் செய்த, அலுவலர்கள், வீரகனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். வீரகனுார் போலீசார், புகையிலை மூட்டைகளை பார்வையிட்டனர். அதில், 49 மூட்டைகளில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புகையிலை இருந்தது தெரிந்தது. போலீசார், காரில் கடத்தி வந்த டிரைவர் யார், கார் உரிமையாளர் யார், எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என விசாரிக்கின்றனர்.

