/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது
/
உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது
ADDED : ஆக 09, 2024 02:22 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், ஆத்துார் உள்பட, 13 உழவர் சந்தைகள், பால் மார்க்கெட், ஆற்றோர சந்தை உள்பட பல்வேறு இடங்களில் மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன.
அங்கு மேச்-சேரி, சின்னதிருப்பதி, கருமந்துறை உள்பட பல்வேறு இடங்-களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுகிறது. தற்போது வரத்து அதிகரித்து அதன் விலை குறைந்துள்ளது. இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலை குறைந்துள்ளது. கடந்த, 30ல் உழவர் சந்தையில் முதல் ரகம் கிலோ, 35, இரண்டாம் ரகம், 30 ரூபாய், சில்லரை விற்-பனை கடைகளில் முதல் ரகம், 40, இரண்டாம் ரகம், 35 ரூபாய்க்கு விற்றது. தற்போது முதல் ரகம் சந்தையில், 26, இரண்டாம் ரகம், 20, கடைகளில் முதல் ரகம், 30, இரண்டாம் ரகம், 25 ரூபாயாக சரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.