/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடித்து வரப்பட்ட மரக்கிளைகளால் போக்குவரத்து பாதிப்பு
/
அடித்து வரப்பட்ட மரக்கிளைகளால் போக்குவரத்து பாதிப்பு
அடித்து வரப்பட்ட மரக்கிளைகளால் போக்குவரத்து பாதிப்பு
அடித்து வரப்பட்ட மரக்கிளைகளால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 18, 2024 04:18 AM
ஓமலுார்: ஏற்காடு, சேர்வராயன் மலைத்தொடரில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், ஓமலுார், சக்கரைசெட்டிப்பட்டி குறு-மிச்சங்கரடு பகுதியில் உற்பத்தியாகும் கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.ஒரே நாள் இரவில் பெய்த கன மழையால், மலையில் பெரிய அளவில் மரங்கள் அடித்து வரப்பட்டு, குறுமிச்சங்கரடு பாலத்தில் தள்ளியது.இதனால் சர்க்கரை செட்டிப்பட்டி, தொப்ளான்காடு உள்ளிட்ட சிறு கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல் நாலுகால்பாலத்தில் தண்ணீர் சென்றதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி, கல்லுாரி செல்ல முடியாமல் மாணவ, மாணவியர் பலர் வீட்டுக்கு திரும்பினர்.மதியம் வனத்துறை அதிகாரிகளுடன், கிராம மக்கள், மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். கிழக்கு சரபங்கா ஆற்றில் இருந்து காமலாபுரம் பெரிய, சின்ன ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிக-ரித்தது. மேலும் பல இடங்களில் பயிரிடப்பட்ட மஞ்சள், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு தோட்டங்களில் தண்ணீர் பாய்ந்து, பல ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வேளான் அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏரி நிரம்பியது ஏற்காடு மலை அடிவாரம் உள்கோம்பையில் மேற்கு சரபங்கா ஆறு உற்பத்தியாகிறது. சில நாட்களாக ஏற்காட்டில் பெய்த மழையால் சரபங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் காடையாம்பட்டி தாலுகாவில் வறண்டு கிடந்த டேனிஷ்பேட்டை ஏரிக்கும், மற்றொரு வழியாக கோட்டைகுள்ள-முடையான் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பி கோடி விழுந்தது.இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து, அப்பகுதியில் குளித்து மகிழ்ந்தனர். டேனிஷ்பேட்டை ஏரி நீர், அருகே உள்ள அரசு விதைப்பண்ணைக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.வாகை மரம் சாய்ந்ததுமேட்டூர், மாதையன்குட்டை அருகே மேட்டூர் - மாதையன்-குட்டை நெடுஞ்சாலையோரம் வாகை, புங்கன் மரங்கள் அதிக-ளவில் உள்ளன. அங்குள்ள தனியார் பள்ளி எதிரே இருந்த பழ-மையான வாகை மரம், நேற்று காலை, 9:00 மணிக்கு வேரோடு சாலையில் சாய்ந்தது.இதனால் சாலை மறுபுறம் உள்ள மின்கம்பத்தில் ஒயர்கள் சேத-மாகி, மின்தடை ஏற்பட்டது. மேலும் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், அப்பகுதி இளைஞர்கள், கிளைகளை வெட்டி சாலையோரம் போட்டனர். அரை மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து தொடங்கியது.ஏற்காட்டில் நெரிசல்ஏற்காட்டில் நேற்று மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை மழை கொட்டியது. இதில் மலைப்பாதையின், 17, 18வது கொண்டை ஊசி வளைவுகள் இடையே சாலையோரம் ஒரே இடத்தில் இருந்த, 3 சவுக்கு மரங்கள் வேருடன் சாய்ந்து சாலை குறுக்கே விழுந்தது. அப்போது வாகனங்கள் செல்லாததால் அசம்பாவிதம் இல்லை.இருப்பினும் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணி-வகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பின் வாகன ஓட்டிகள், மரத்துக்கு அடியில் சிறு வழி ஏற்படுத்தி-யதால், இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல முடிந்தது. இதை அறிந்து அங்கு வந்த போலீஸ், நெடுஞ்சாலை துறையினர், பொக்லைன் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், 2 மணி நேர நெரிசல் சீரானது.
சூறாவளி காற்றுடன் கனமழைஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 6:30 மணிக்கு சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கு மேல் மழையால், சாலை, தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, 4:30 முதல், 5:30 மணி வரை வெயி-லுடன் மித மழை பெய்தது.