/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து
/
மாநகராட்சியில் இன்று குடிநீர் வினியோகம் ரத்து
ADDED : ஆக 27, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேலம் மாநகராட்சியின், தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில், இன்று (ஆக., 27) மின் பரா-மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால், இன்று ஒருநாள் மட்டும், சேலம் மாநகராட்சி பகுதி-களில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக் கொள்-ளப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.