ADDED : ஜூலை 14, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல் அருகே புளியங்குறிச்சி, ஓடைக்காட்டை சேர்ந்த விவசாயி பரமசிவம், 50. இவரது தோட்டத்தில் கிணறு வெட்டும் பணி, ஒரு மாதமாக நடக்கிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, வையப்பமலையை சேர்ந்த
மஞ்சுநாதன், 42, நேற்று மதியம், 12:00 மணிக்கு, கிணற்றோரம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கற்கள் சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, சக தொழிலா-ளிகள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்து-வர்கள் தெரிவித்தனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

