/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.30 கோடியில் பல்வேறு திட்டப்பணி தி.மு.க., துணை செயலர் துவக்கிவைப்பு

ADDED : பிப் 05, 2024 10:27 AM
சேலம்: பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் பொம்மாயம்மாள் நகரில், ௧௨ லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைத்து, ௮ லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.
தனலட்சுமி நகரில் ராஜா வீடு முதல் பிரதான சாலை வரை, ௬ லட்சம் ரூபாய் செலவில் கழிவுநீர் கால்வாய், ௮ லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. அதேபோல் தாசநாயக்கன்பட்டியில், ௩௫ லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் இணைப்பு, காந்திபுரம் காலனியில் உள்ள, ௮௦ வீடுகளுக்கு, ௫.௯௨ லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் இணைப்பு, அண்ணா காலனியில், ௨௮ லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது.
மேலும் தாசநாயக்கன்பட்டியில், ௨௭.௨௫ லட்சம் ரூபாய் செலவில், ௬௦,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் உள்பட, ௧.30 கோடி ரூபாய் பணிகளுக்குரிய பூமி பூஜையை, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலர் உமாசங்கர், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு கவுன்சிலர்கள் பிரியா மகேந்திர பிரபு, பூங்கொடி சிவராஜ், ஊராட்சி தலைவர் மலர்விழி செந்தில்குமார், குறிஞ்சி பாண்டியன், ராஜகணபதி, மக்கள் பங்கேற்றனர்.