/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காரில் கடத்தி வந்த 15 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
/
காரில் கடத்தி வந்த 15 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
காரில் கடத்தி வந்த 15 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
காரில் கடத்தி வந்த 15 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
ADDED : ஆக 19, 2025 01:36 AM
சேலம், பெங்களூருவில் இருந்து, காரில் கடத்தி வந்த, 15 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
கருப்பூர் போலீசார் நேற்று, கருப்பூர் பிளாசா அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த போர்டு காரை நிறுத்தி சோதனை செய்த போது, டிரைவர் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மங்களபுரத்தை சேர்ந்த அரவிந்தன், 27, என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து காரில், 15 கிலோ கடத்தி வந்து விற்பனைக்காக செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அரவிந்தனை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், 15 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.