/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவ முகாமில் 1,646 பேருக்கு பரிசோதனை
/
மருத்துவ முகாமில் 1,646 பேருக்கு பரிசோதனை
ADDED : ஆக 31, 2025 07:31 AM
இடைப்பாடி: இடைப்பாடியில், தமிழக அரசின், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் சவுண்டம்மாள் தலைமை வகித்தார். இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா தொடங்கி வைத்தார்.
இருதயம், நுரையீரல், காப்பீடு திட்ட அட்டை முகாம், இ.சி.ஜி., எக்ஸ்ரே உள்ளிட்ட அனைத்து வித நோய்களுக்கு நடந்த மருத்-துவ முகாமில், 890 பெண்கள் உள்பட, 1,646 பேர் பங்கேற்றனர். ரத்த அழுத்தம், ரத்த வகை, உயரம், எடை உள்ளிட்ட அடிப்படை பரிசோதனைகளை மேற்கொண்டனர். 1,317 பேர் இ.சி.ஜி., 107 பேர் எக்ஸ்ரே, 158 பேர், அல்ட்ரா ஸ்கேன், 157 பேர் எக்கோ பரி-சோதனை செய்து கொண்டனர். இதனிடையே கலெக்டர் பிருந்தா-தேவி, முகாமை பார்வையிட்டார்.