/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை மறியலில் ஈடுபட்ட 176 பேர் கைது
/
சாலை மறியலில் ஈடுபட்ட 176 பேர் கைது
ADDED : ஜன 23, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சி.ஐ.டி.யு., சார்பில், சேலம், மெய்யனுார் பணிமுனை முன், சாலை மறியல் நேற்று நடந்தது. மண்டல தலைவர் செம்பன் தலைமை வகித்தார். அதில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 15வது ஊதிய ஒப்-பந்த பேச்சை உடனே நடத்துதல்; 30,000 காலி பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போக்குவரத்துக்கு இடையூறால், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் கோவிந்தன், மாநில துணைத்தலைவர் தியாகராஜன், செயலர் கிருஷ்ணமூர்த்தி, அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலர் முருகேசன் உள்பட, 176 பேரை, போலீசார் கைது செய்தனர்.

