ADDED : மே 15, 2025 01:25 AM
சேலம், சேலம் சரகத்தில், 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்களுக்கும் ஸ்டேஷன்களை நியமித்து, டி.ஐ.ஜி. உமா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை தேவி, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி ஸ்டேஷனுக்கும், தர்மபுரி, மாரண்டஹள்ளி சுப்ரமணியம், கிருஷ்ணகிரி ஹட்கோ ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.
பர்கூர் வளர்மதி, திருச்செங்கோடு டவுன்; அங்கு பணியாற்றிய வெங்கட்ராமன், மாரண்டஹள்ளி; அரூர் மதுவிலக்கு பிரிவு வசந்தா, கடத்துாருக்கும், கிருஷ்ணகிரி ஸ்பெஷல் பிராஞ்ச் இளவரசன், பர்கூருக்கும்; அரூர் ஜெய்கீர்த்தி, கம்பைநல்லுார் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆதம் அலி, தர்மபுரி கோட்டப்பட்டிக்கும்; செந்தில், சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டிக்கும்; சிவக்குமார், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்துக்கும், சித்ராதேவி, தர்மபுரி ஐ.யு.சி.ஏ.டபிள்யு பிரிவுக்கும்; யுவராணி, சேலம் மாவட்டம் ஓமலுார் மகளிர் ஸ்டேஷனுக்கும் நியமிக்கப்பட்டனர்.
அதேபோல் மணிமாறன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கும், அங்கப்பன், சேலம் மாவட்டம் ஓமலுாருக்கும், கண்ணன், தர்மபுரி மாவட்டம் மதிகோன்பாளையத்துக்கும்; சம்பத்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடைக்கும்; சந்திரா, தர்மபுரி மாவட்டம் அரூர் மதுவிலக்கு பிரிவுக்கும், பிரபா, சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் ஸ்டேஷனுக்கும் நியமிக்கப்பட்டனர்.