/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இறைச்சி சாப்பிட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதி
/
இறைச்சி சாப்பிட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதி
இறைச்சி சாப்பிட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதி
இறைச்சி சாப்பிட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதி
ADDED : டிச 27, 2025 04:25 AM
ஆத்துார்: இறைச்சி சாப்பிட்ட 19 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், மணப்பாக்கத்தை சேர்ந்த புரோக்கர்கள் வேல்முருகன், 52; வினோத், 35. இவர்கள் அதே பகுதியை சேர்ந்த, 22 பேரை விவசாய வேலைகளுக்காக, சேலம் மாவட்டம், வடசென்னிமலைக்கு அழைத்து சென்றனர்.
நேற்று முன்தினம் அங்கு, வினோத்தின் அண்ணன் யோகேஷ், ஆட்டிறைச்சி சமைத்தார். இரவு, அதை சாப்பிட்ட, எட்டு சிறுவர்கள், வேல்முருகன், 52; கலைவாணி, 30, உட்பட, 19 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டன. அனைவரும் ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களிடம், மாவட்ட சுகாதார அலுவலர் யோகானந்த், மருத்துவ குழுவினர் விசாரித்தனர். அதில், வடசென்னிமலை, சூரைக்காடு விவசாயி ஒருவரிடம், மயங்கி விழுந்து இறந்த ஆட்டின் இறைச்சியை யோகேஷ் சமைத்தது தெரிந்தது. மேலும் விசாரிக்கின்றனர்.

