/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் காணிக்கை தங்க நாணயம்; குப்பை கூடையில் கிடந்ததா?
/
கோவில் காணிக்கை தங்க நாணயம்; குப்பை கூடையில் கிடந்ததா?
கோவில் காணிக்கை தங்க நாணயம்; குப்பை கூடையில் கிடந்ததா?
கோவில் காணிக்கை தங்க நாணயம்; குப்பை கூடையில் கிடந்ததா?
UPDATED : டிச 27, 2025 08:48 AM
ADDED : டிச 27, 2025 04:21 AM

சேலம்: சேலம், வெண்ணங் குடி முனியப்பன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் போது, தங்க நாணயம் மாயமானதாக புகார் எழுந்தது.
அவை குப்பை கூடையில் இருந்ததாக, செயலர் அலுவலர் கடிதம் வாயிலாக போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.
சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, செயல் அலுவலர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது.
தன்னார்வலர்கள், திருத்தொண்டர் பேரவையினர் எண்ணினர். ஐந்து உண்டியல் உள்ள நிலையில், நான்கு மட்டும் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன.
அப்போது, தங்க நாணயம் வெளியே சென்றதாக, பேரவையினர், அதன் தலைவர் ராதா கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் விசாரித்தபோது, தங்க நாணயம் காணாமல் போனது தெரிந்தது.
ராதாகிருஷ்ணன் தகவல்படி, அங்கு வந்த, சூரமங்கலம் போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
காணிக்கை எண்ணும் பணியின்போது, எங்கள் உறுப்பினர் சங்கர், தங்க நாணய கவரை எடுத்துள்ளார்.
அதை ஒருவர் வாங்கி, செயல் அலுவலரிடம் கொடுத்துள்ளார். அவர், ஒரு பெட்டியில் போட்டுள்ளார். மதியம், அப்பெட்டியில் தங்க நாணயத்தை காணவில்லை.
யாரோ எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், 500 ரூபாய் நோட்டுகள் எண்ணும் இடத்தில், பதிவு இல்லாததும் சந்தேகத்தை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
செயல் அலுவலர் பரமேஸ்வரன், சூரமங்கலம் போலீசாருக்கு அனுப்பிய புகார் கடித்ததில், 'நாணயம் மாயம் என அளித்த புகாரையடுத்து, கோவிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
'அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் குப்பை கூடையில், 2 கிராம் தங்க காசு, மஞ்சள் கயிறுடன் கூடிய பட்டைத்தாலி, கல்வைத்த மோதிரம், 500 ரூபாய் தாள் - 16 உட்பட, 9,500 ரூபாய், அமெரிக்கா, சிங்கப்பூர் டாலர்கள், இலங்கை, சவுதி அரேபியா நோட்டுகள் இருந்தன' என, கூறியுள்ளார்.

