/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக்கில் சென்றவரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது
/
பைக்கில் சென்றவரை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது
ADDED : ஜூலை 16, 2025 01:08 AM
ஆத்துார், சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரை சேர்ந்தவர் ஆதவன், 21. கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் கடம்பூரில் இருந்து ஆத்துார், வி.வி.காலனி வழியே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவர், பைக்கை வழிமறித்து, ஆதவனை தாக்கியதோடு, அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து ஆதவன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், ஆத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்த, பெயின்ட் அடிக்கும் தொழிலாளிகள் சச்சின், 21, சாகித், 19, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் சச்சின் மீது கஞ்சா வைத்திருந்ததாகவும், சாகித் மீது சாலையில் சென்றவரிடம் மொபைல்போன், பணம் பறித்த வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து இருவரையும், நேற்று போலீசார் கைது செய்தனர்.