sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தறிகெட்டு ஓடிய பைக்கால் 2 பேர் பலி

/

தறிகெட்டு ஓடிய பைக்கால் 2 பேர் பலி

தறிகெட்டு ஓடிய பைக்கால் 2 பேர் பலி

தறிகெட்டு ஓடிய பைக்கால் 2 பேர் பலி


ADDED : ஜூலை 07, 2025 03:53 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை, கோவிந்தன் தெருவை சேர்ந்த, சந்-திரகாந்த் மகன் விக்கி, 21. பத்தாம் வகுப்பு படித்த இவர், தந்-தையின் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தார்.

நெத்திமேடு, பைக்கார தெருவை சேர்ந்த தனபால் மகன் சந்-தோஷ்ராஜ், 21. இவரும் விக்கியும் நண்பர்கள். சனி, ஞாயிறு இரவில் கிரிக்கெட் விளையாடுவர்.

அதன்படி, சூரமங்கலத்தில் விளையாட்டை முடித்துக்கொண்டு, நேற்று அதிகாலை, 2:40 மணிக்கு, கே.டி.எம்., பைக்கில் வீட்-டுக்கு புறப்பட்டனர்.விக்கி ஓட்டினார். அண்ணா மேம்பாலத்தில் இருந்து, கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், தறிகெட்டு ஓடி, சாலை நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி-யபடி, சிறிது சென்ற பின், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அதிகாலை, 5:30 மணிக்கு, அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.

அஸ்தம்பட்டி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us