தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளி பலி

கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளி பலி

கிணற்றில் மூழ்கி 2 தொழிலாளி பலி


ADDED : ஆக 14, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: கொளத்துார், சின்னமேட்டூரை சேர்ந்த, மரம் ஏறும் தொழிலாளி முத்து, 47. இவரது மனைவி தமிழ்செல்வி, 42. இவர்களது இரு மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

நேற்று முன்தினம் மாலை, முத்து, மேட்டூர் அணை சென்றாய பெருமாள் கோவில் நீர்பரப்பு பகுதியில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவர், அங்கு நீர் பரப்பில் மூழ்கியிருந்த கிணற்றில் விழுந்-துள்ளார். நீச்சல் தெரிந்த அவருக்கு, வலிப்பு ஏற்படவே மூழ்கி-யுள்ளார்.அவரது செருப்புகள் மட்டும் கரையில் இருந்ததால் சந்தேகம் அடைந்து உறவினர்கள் கொடுத்த தகவல்படி, நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மேட்டூர் தீயணைப்பு வீரர்கள், சம்-பவ இடத்துக்கு நேற்று காலை, 8:30 மணிக்கு சென்று, 3 மணி நேரத்துக்கு பின், கிணற்றில், 60 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த முத்து சடலத்தை மீட்டனர். பின் கொளத்துார் போலீசில் ஒப்ப-டைத்தனர். அவர்கள் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தற்கொலை?

சேலம், சிவதாபுரத்தை சேர்ந்தவர் அண்ணாமலை, 34. வெள்ளி பட்டறை வைத்திருந்தார். இவரது அத்தை, இரும்பாலையில் வசித்த நிலையில் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். அண்ணாம-லையின் மகள், தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அத்தை இறப்புக்கு செல்ல வேண்டாம் என, உறவினர்கள் கூற, அண்ணாமலை செல்லவில்லை.

இந்த வேதனையில் அங்குள்ள கிணற்றின் அருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்துள்ளார். அருகே வசிப்பவர்கள், அவரை காப்-பாற்ற முயன்றும் முடியவில்லை. இதை அறிந்து வந்த, கொண்ட-லாம்பட்டி போலீசார், சடலத்தை மீட்டு, தவறி விழுந்தாரா, தற்-கொலை செய்தாரா என விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us