/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவர்கள் போதையில் இருந்ததால் 2 மினி சரக்கு வாகனம் பறிமுதல்
/
டிரைவர்கள் போதையில் இருந்ததால் 2 மினி சரக்கு வாகனம் பறிமுதல்
டிரைவர்கள் போதையில் இருந்ததால் 2 மினி சரக்கு வாகனம் பறிமுதல்
டிரைவர்கள் போதையில் இருந்ததால் 2 மினி சரக்கு வாகனம் பறிமுதல்
ADDED : ஆக 26, 2025 01:16 AM
கெங்கவல்லி, கெங்கவல்லியில், மதுபோதையில் மினி சரக்கு வாகனத்தை ஓட்டி
வந்ததால், இரண்டு மினி சரக்கு வேனை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி போலீசார், நேற்று கெங்கவல்லி, ஆணையாம்பட்டி, தெடாவூர், தம்மம்பட்டி பிரிவு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆணையாம்பட்டி பகுதியில், மது அருந்தியபடி மினி சரக்கு வாகனம் ஓட்டி வந்ததால், அதை போலீசார் சோதனை செய்தனர். விசாரணையில் பெரம்பலுார் மாவட்டம், வெங்கனுாரை சேர்ந்த மணி மகன் சிவலிங்கம், 31, என்பதும், பாத்திரம் வியாபாரம் செய்துவிட்டு, மது அருந்தியபடி வந்தது தெரியவந்தது. அவரது வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், தலைவாசல் அருகே, லத்துவாடியை சேர்ந்த கனகராஜ் மகன் ரஞ்சித், 25, என்பவர், மினி சரக்கு வேனை மது போதையில் ஓட்டி வந்தது தெரியவந்தது. இந்த வாகனத்தையும்
பறிமுதல் செய்தனர்.